ADDED : ஏப் 01, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, கனிமவளத்துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம், ராயக்கோட்டை சாலை, காமராஜ் நகரில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக சென்ற இரு லாரிகளை மடக்கி சோதனையிட்டதில், 7 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அளித்த புகார் படி, இரு லாரிகளை பறிமுதல் செய்த, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், லாரியை ஓட்டி சென்ற பாலக்குறி ராஜா, பெத்ததாளப்பள்ளி பழனி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்
