ADDED : ஜூன் 04, 2026 04:49 AM
சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனி-மங்கள் துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், சூளகிரி அருகே பிள்ளை-கொத்துார் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வாகன சோதனை செய்தனர். அப்-போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், பிள்ளைகொத்துாரிலிருந்து, ஓசூருக்கு, 4 யூனிட் மண்ணை சட்ட விரோதமாக கொண்டு செல்வது தெரிந்தது.
லாரியை பறி-முதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.* கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு சிறப்பு தாசில்தார் செந்தில்நாதன், 45, மற்றும் அலுவ-லர்கள் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் அடுத்த பையூர், பாரத கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் திருட்டுத்த-னமாக சிலர் மண் அள்ளி கொண்டிருந்தனர்.
அலுவலர்களை பார்த்ததும் தப்பியோடினர். அதி-காரிகள் புகார் படி, லாரியை பறிமுதல் செய்த காவேரிப்பட்டணம் போலீசார், உரிமையாளரான முதலிக்கான்கொட்டாயை சேர்ந்த மகேந்திரன், 44, என்பவர் மீது வழக்கு பதிந்து
விசாரிக்கின்றனர்.
