ADDED : நவ 25, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; குருபரப்பள்ளி அருகே நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் கனிமவளங்கள் ஏதும் கடத்தப்படுகிறதா என ஆய்வு செய்தனர். அப்போது, கொரல்நத்தம் முனியப்பன் கோவில் அருகே சென்ற இரு லாரிகளை அதிகாரிகள் மடக்கி சோதனையிட்டதில், 2 யூனிட் மண்ணை ஜீனுார் வழியாக கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது.
இது குறித்து மாரச்சந்திரம் வி.ஏ.ஓ., பூங்கொடி அளித்த புகார்படி, குருபரப்பள்ளி போலீசார், லாரிகளை பறிமுதல் செய்து, லாரிகளை ஓட்டி வந்த நெடுசாலையை சேர்ந்த எல்லப்பன், 34, பாறையூர் கோவிந்தராஜ், 41 ஆகிய இருவரை கைது செய்தனர்.
