ADDED : ஆக 19, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 31. கோவில் அர்ச்சகர்; இவர் நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, வீட்டின் முன் தன் ஹோண்டா டியோ மொபட்டை நிறுத்தியிருந்தார்.
இதை இருவர் திருடி தப்பி செல்ல முயன்றனர். இதை கவனித்த ஆனந்தகுமார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்து தேன்க-னிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், தேன்க-னிக்கோட்டை அருகே புதுாரை சேர்ந்த சாம்சன், 22 மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், பைக்கை பறிமுதல் செய்தனர்.