ADDED : நவ 23, 2024 01:40 AM
மாணவி உட்பட 2 பேர் மாயம்
ஓசூர், நவ. 23-
ஓசூர் அருகே பாகலுாரை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ முதலாமாண்டு படிக்கிறார்; கடந்த, 18 மாலை, 5:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரது தாய் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், பாகலுார் காமராஜ் நகரை சேர்ந்த பிரதீப், 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பேரிகை அருகே கொலதாசபுரத்தை சேர்ந்தவர் வெங்கடராமப்பா மகள் ரம்யா, 23. நர்சிங் படித்துள்ளார்; கடந்த, 20 மதியம், 1:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் பேரிகை போலீசில் கொடுத்த புகாரில், பாகலுார் அருகே மாவத்துாரை சேர்ந்த ஸ்ரீதர், 24, மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.