/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி
/
இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி
ADDED : ஜூலை 11, 2025 01:11 AM
கிருஷ்ணகிரி, பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அக்சத் ஆலம், 30. சூளகிரி அடுத்த காமன்தொட்டியில் தங்கி பேப்பர் மில்லில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் கோபசந்திரம் அருகே, கிருஷ்ணகிரி- - ஓசூர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற பிக்கப் வேன் மோதி பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
* தளி அடுத்த வானமங்கலத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 26. ஓசூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த, 8ல், பணி முடிந்து டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் வீடு திரும்பினார். இரவு, 10:30 மணியளவில் வானமங்கலம் அருகே பஞ்சேஸ்வரம் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த பிரகாஷ் பலியானார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.

