/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
/
புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
ADDED : ஜூலை 31, 2024 07:19 AM
ஓசூர்: ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் பிரபாகரன், பயாஸ் ஆகியோர், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள திருவண்ணாமலை மற்றும் பெங்களூரு பஸ்கள் ஏறும் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த ராஜேசேகர், 31, என்பவரிடம், 7,050 ரூபாய் மதிப்புள்ள, 3.44 கிலோ புகையிலை பொருட்களும், விழுப்புரம் ஐயன்கோவில் பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருமுருகன், 44, என்பவரிடம், 3,880 ரூபாய் மதிப்புள்ள, 5.50 கிலோ புகையிலை பொருட்களும் இருந்தன. இருவரையும் கைது செய்த போலீசார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

