/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
29 ஆண்டாக தலைமறைவாக உள்ள 2 பேர் 'அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள்'
/
29 ஆண்டாக தலைமறைவாக உள்ள 2 பேர் 'அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள்'
29 ஆண்டாக தலைமறைவாக உள்ள 2 பேர் 'அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள்'
29 ஆண்டாக தலைமறைவாக உள்ள 2 பேர் 'அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள்'
ADDED : பிப் 28, 2025 07:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், 11 அரசு பஸ்களை சேதப்படுத்திய வழக்கில், 29 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இருவர், அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த, 1996, ஜூன், 20ல் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பள்ளி மாணவி பலியானார். இதனால், கிருஷ்ணகிரி நகரில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் சிலர் ரகளையில் ஈடுபட்டு, தாலுகா அலுவலகம் முதல், சங்கல்தோப்பு தர்கா வரை கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் நின்ற, 11 அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
இது குறித்து, அப்போதைய தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து பொறியாளர் தங்கராஜ் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், கிருஷ்ணகிரி கோட்டை தெரு ஜாவித், பூக்கார தெரு அப்சர் உட்பட, 35 பேர் மீது வழக்கு பதிந்தனர். இவ்வழக்கு, கிருஷ்ணகிரி நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த, 29 ஆண்டுகளாக முக்கிய குற்றவாளிகளான ஜாவித், அப்சர் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை.இது குறித்து போலீசார் கூறுகையில், 'தலைமறைவாக உள்ள இவர்கள் இருவரை பற்றி எந்த தகவல்களும் இல்லை. இது குறித்து, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். இதையடுத்து அவர்கள் இருவரையும், அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது' என்றனர்.

