தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கனிமங்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

கனிமங்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

கனிமங்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


ADDED : செப் 14, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 04:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகலுார்: ஓசூர் அருகே, பாலிகானப்பள்ளி வி.ஏ.ஓ., பிரபாகரன், தேவீரப்-பள்ளியில் உள்ள சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு அருகே, நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அப்போது, தடையை மீறி புக்கசாகரம் கிராமத்திலிருந்து, கர்நாடகா மாநிலத்திற்கு, 4 யூனிட் எம்.சாண்டை கடத்தி செல்வது தெரிந்தது. அதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாகலுார் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., பிரபாகரன் புகார் படி, லாரி டிரை-வரும், உரிமையாளருமான, கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், பங்காருபேட்டை அருகே, கொரவனஹளளியை சேர்ந்த முனிராஜ், 31, என்பவரை கைது செய்தனர்.

ஓசூர் அருகே கக்கனுார் சாலையிலுள்ள கல்லுப்பள்ளி கூட்-ரோட்டில், ஈச்சங்கூர் வி.ஏ.ஓ., முனிகிருஷ்ணன் மற்றும் அதிகா-ரிகள் நடத்திய வாகன சோதனையில், சொக்கநாதபுரத்திலிருந்து, கர்நாடகாவிற்கு, 4 யூனிட் எம்.சாண்ட் கடத்தி சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, நல்லுார் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்-டது. வி.ஏ.ஓ., முனிகிருஷ்ணன் புகார் படி, லாரி டிரைவரான, ஓசூர் அருகே மாரச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த கணேஷ், 32, என்-பவரை போலீசார் கைது செய்தனர். லாரி உரிமையாளரான கர்நா-டகா மாநிலம், சர்ஜாபூரை சேர்ந்த கக்கராஜ் என்பவரை தேடி வரு-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us