ADDED : ஜூலை 20, 2025 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு துணை தாசில்தார் பாரதி தலைமையில் அதிகாரிகள் அச்சமங்கலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. பாரதி புகார் படி, பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
அதேபோல கனிம வள பிரிவு ஆர்.ஐ., அருண்குமார் தலைமையில் அதிகாரிகள் மூங்கில்புதுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. அருண்குமார் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

