ADDED : நவ 13, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த பாளையங்கோட்டை அருகே, பண்டேயூரை சேர்ந்தவர் நாகராஜ் மகள் பிரேமா, 19. கடந்த, 10ம் தேதி காலை, 9:30 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.
அவரது தந்தை தளி போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், கர்நாடகா மாநிலம், பொம்மசந்திரா பகுதியை சேர்ந்த சிவராஜ், 25, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.சூளகிரி அடுத்த கோனேரிப்பள்ளி அருகே, குண்டுகுறுக்கி கிரா-மத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் லாவண்யா, 19. கிருஷ்ண-கிரி தனியார் கல்லுாரியில் பி.காம்., 2ம் ஆண்டு படிக்கிறார்; நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி லாவண்யா திரும்பி வரவில்லை. அவரது தாய் முனிலட்-சுமி, 36, புகார் படி, சூளகிரி போலீசார் தேடி
வருகின்றனர்.

