/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தெருநாய்கள் கடித்து 2 வயது மான் பலி
/
தெருநாய்கள் கடித்து 2 வயது மான் பலி
ADDED : நவ 05, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த நேரலக்கோட்டை காப்புக்காடு மற்றும் நந்திபெண்டா காப்புக்காடுகளில், அரிய வகை உயிரினங்களான மான், மலைப்பாம்பு, மயில் மற்றும் காட்டுப்பன்றி ஆகியவை உள்ளன. ஒரு சில நேரங்களில் வனப்பகுதி அடிவாரங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கும் மற்றும் கிராம பகுதிகளுக்கும் தண்ணீர், உணவு தேடி இந்த வன விலங்குகள் வந்து விடுகின்றன.
நேரலகோட்டை காப்புக்காட்டுக்கு உட்பட்ட பெரிய மலை வனப்பகுதியில் இருந்து நேற்று காலை, 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று, ஏர்கெட் பகுதியிலுள்ள விவசாய நிலத்திற்கு வந்துள்ளது. இதைக்கண்ட தெருநாய்கள் அதை துரத்தி கடித்துள்ளன. இதில் மான் உயிரிழந்தது.

