ADDED : மார் 23, 2026 07:39 AM
அ நிறம் | அளவு
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, எர்ரம்பட்டியை சேர்ந்தவர் ஞானவேல், 30. இவர் விவசாய பணிக்காக ஜான்டீர் என்ற டிராக்டரை வைத்து, விவசாய பணிகளுக்கு வாடகைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு பார்த்தபோது டேங்கருடன் கூடிய டிராக்டர் மற்றும் டேங்கர், மருந்து அடிக்கும் மிஷின் உட்பட, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்-களை காணவில்லை. போச்சம்பள்ளி போலீசில் ஞானவேல் அளித்தார். அதன்படி போலீசார் அப்-பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், ஊத்தங்கரை அடுத்த, கோவிந்தாவரம் பகுதியை சேர்ந்த காந்தி, 22, மற்றும் மகனுார்பட்டி, குரும்பர்வலசையை சேர்ந்த விக்னேஷ், 19, ஆகியோரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
