/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
21 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பு
/
21 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பு
ADDED : மார் 09, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகர தி.மு.க., சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1ல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த 21 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகர செயலாளர் நவாப் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, தி.மு.க.,கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் பரிதாநவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சக்கரபாணி, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.

