/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேனில் 2.10 டன் ரேஷன் அரிசி ; கடத்த முயன்ற 4 பேர் கைது
/
வேனில் 2.10 டன் ரேஷன் அரிசி ; கடத்த முயன்ற 4 பேர் கைது
வேனில் 2.10 டன் ரேஷன் அரிசி ; கடத்த முயன்ற 4 பேர் கைது
வேனில் 2.10 டன் ரேஷன் அரிசி ; கடத்த முயன்ற 4 பேர் கைது
ADDED : மார் 22, 2024 07:12 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் எஸ்.ஐ.,க்கள் பெரியசாமி, பெருமாள் மற்றும் போலீசார் நேற்று சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, உலகம் ஜங்சன் கூட்ரோடு அருகில், சூளகிரி - ராயக்கோட்டை சாலையில் வந்த, பொலிரோ பிக்கப் வேனை மடக்கினர். அதில், 50 கிலோ அளவிலான, 42 மூட்டைகளில், 2,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில், சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில், ரேஷன் அரிசியை வாங்கி, அதை கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றது தெரிந்தது.
இதையடுத்து வேனில் இருந்த தேன்கனிக்கோட்டை சக்திவேல், 36, முனுசாமி, 32, முனியப்பன், 26, வினோத், 21 ஆகிய நால்வரை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசியுடன் பிக்கப்வேனையும் பறிமுதல் செய்தனர்.