ADDED : மே 01, 2026 02:22 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பார்த்தீபன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில் செயல்படும், 22 தபால் நிலையங்களில், பொதுமக்கள் ஆதார் அட்டைக்கான புதிய பதிவை கட்டணமின்றி மேற்கொள்ளலாம். மேலும், ஆதார் அட்-டையில் உள்ள விபரங்களில் திருத்தம் செய்ய, 75 ரூபாய் மற்றும் புகைப்படம், கைரேகை போன்ற விபரங்களை புதுப்பிக்க, 125 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதன்படி, இந்த சேவை, கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையம், கிருஷ்ணகிரி தொழிற்பேட்டை தபால் நிலையம், பர்கூர், மத்துார், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, காவேரிப்பட்-டணம், காரிமங்கலம், போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, கல்லாவி, எலத்தகிரி, வேப்பனஹள்ளி, வரட்டனப்பள்ளி, சூளகிரி, ராயக்-கோட்டை, ஓசூர், ஓசூர் தொழிற்பேட்டை, மத்திகிரி, தளி, கெல-மங்கலம் மற்றும் தேன்கனிக்கோட்டை தபால் நிலையங்களில் இந்த சேவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் இந்த சேவை-களை பயன்படுத்தி, ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை எளி-தாக செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
