/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போராட்டத்தில் பங்கேற்க சென்ற டாஸ்மாக் ஊழியர் 23 பேர் கைது
/
போராட்டத்தில் பங்கேற்க சென்ற டாஸ்மாக் ஊழியர் 23 பேர் கைது
போராட்டத்தில் பங்கேற்க சென்ற டாஸ்மாக் ஊழியர் 23 பேர் கைது
போராட்டத்தில் பங்கேற்க சென்ற டாஸ்மாக் ஊழியர் 23 பேர் கைது
ADDED : ஜன 28, 2025 06:41 AM
கிருஷ்ணகிரி: டாஸ்மாக் ஊழியர்களின் பணியை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடக்க இருந்தது. இதில், பங்கேற்க பஸ்சில் செல்ல கடந்த, 25ல் கிருஷ்ணகிரி டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகப்பன், 50, மற்றும் 10 பேர், கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் வந்தனர். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
அதேபோல, போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட முயன்ற டாஸ்மாக் கடை மேற்பார்வையளர் குமரன், 53 மற்றும் 11 பேரை போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.