25,000 பனை விதை நடவு
கிருஷ்ணகிரி, நவ. 26-
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஏரிக்கரையோரத்தில், வனத்துறை சார்பில் பசுமை இந்தியா திட்டத்தில் முதல் கட்டமாக, 2,000 பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் நேற்று நடந்தது.
இதை, மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, 25,000 பனைவிதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனடிப்படையில், இன்று முதற்கட்டமாக, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஏரிக்கரையில், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் பசுமை இந்தியா இயக்க திட்டத்தில், 8.75 லட்சம் ரூபாய் மதிப்பில், 2,000 பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 4,800 பனை விதைகள் நடவு செய்ய, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
கோட்ட அலுவலர் தினேஷ்குமார், தாசில்தார் வளர்மதி, பி.டி.ஓ.,க்கள் சிவப்பிரகாசம், செல்லக்கண்ணாள், ஊர்மக்கள், கலந்து கொண்டனர்.