/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'குரூப் - 2' தேர்வில் 27 பேர் 'ஆப்சென்ட்'
/
'குரூப் - 2' தேர்வில் 27 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 16, 2026 07:59 AM
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒத்தி வைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2' தேர்வு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்தது.கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் மொத்தம், 114 பேர், 'குரூப் - 2' தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 104 பேர் தேர்வெழுதினர். 10 பேர் தேர்வெழுத வரவில்லை. அதேபோல், மதியம் நடந்த, 'குரூப் - 2ஏ' தேர்விற்கு, 117 பேர் விண்ணப்பித்திருந்தனர். 100 பேர் பங்கேற்ற நிலையில், 17 பேர் பங்கேற்கவில்லை. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் ஆய்வின் போது, கிருஷ்ணகிரி தாசில்தார் ரமேஷ், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

