/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
3 குழந்தைகளுடன் தாய்உட்பட ஐவர் மாயம்
/
3 குழந்தைகளுடன் தாய்உட்பட ஐவர் மாயம்
ADDED : மார் 21, 2025 01:28 AM
3 குழந்தைகளுடன் தாய்உட்பட ஐவர் மாயம்
தேன்கனிக்கோட்டை:கெலமங்கலம் அடுத்த டி.பரத்துாரை சேர்ந்தவர் சிவரஞ்சனி, 27. இவரது கணவர் ஐயப்பன். கணவருடன் கோபித்து கொண்டு, தன், 10, 6 மற்றும் 3 வயதிலுள்ள, 3 பெண் குழந்தைகளுடன், சில தினங்களுக்கு முன் அருகேயுள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்ற சிவரஞ்சனி கடந்த, 18ல் குழந்தைகளுடன் மாயமானார். அவரின் தந்தை நேற்று முன்தினம் கெலமங்கலம் போலீசில் அளித்த புகாரில், முகலுாரை சேர்ந்த தொழிலாளி சேகர், 26, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. கடந்த, 16ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதில், காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டியை சேர்ந்த ராஜேஷ், 30, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.