தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது


ADDED : மார் 27, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்:ஓசூர் அருகே, பேரண்டப்பள்ளியை சேர்ந்தவர் கண்ணன், 35. கூலித்தொழிலாளி. கடந்த, 24ம் தேதி மாலை, பேரண்டப்பள்ளியில் உள்ள தொரப்பள்ளி ஆர்ச் அருகே வைத்து, முன்விரோதத்தில் கண்ணனை சிலர் கல்லால் தாக்கினர். அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டார்.

அன்றிரவு, 8:00 மணிக்கு கண்ணனின் உறவி னரான பேரண்டப்பள்ளி அருகே கொத்துாரை சேர்ந்த சங்கர், 38, என்பவர், கண்ணனை தாக்கியவர்களிடம் கேள்வி எழுப்பினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த நபர்கள், சங்கர் மற்றும் அவரது மாமனார் உதயசூரியன் ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி, கையால் தாக்கினர். இது குறித்து, ஹட்கோ போலீசில் நேற்று முன்தினம் சங்கர் புகார் செய்தார். அதன்படி, கொத்துாரை சேர்ந்த சக்திவேல், 30, சிவா, 26, தாம்சனப்பள்ளியை சேர்ந்த நெல்சன், 26, ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us