sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆசிரியரை கொடூரமாக தாக்கி பணம், மொபைல் பறித்த 3 சிறுவர்கள் கைது

/

ஆசிரியரை கொடூரமாக தாக்கி பணம், மொபைல் பறித்த 3 சிறுவர்கள் கைது

ஆசிரியரை கொடூரமாக தாக்கி பணம், மொபைல் பறித்த 3 சிறுவர்கள் கைது

ஆசிரியரை கொடூரமாக தாக்கி பணம், மொபைல் பறித்த 3 சிறுவர்கள் கைது


ADDED : பிப் 21, 2025 07:30 AM

Google News

ADDED : பிப் 21, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சாலையில் நடந்து சென்ற ஆசிரியரை கொடூரமாக தாக்கி, மொபைல், பணத்தை பறித்து சென்ற, 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் டேவிட்ராஜன், 57; தனியார் பள்ளி ஆசிரியர். இவர் கடந்த, 18 ல் கிருஷ்ணகிரியிலுள்ள தன் நண்பர் வீட்டிற்கு வந்து விட்டு, காஞ்சிபுரம் திரும்ப பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து சென்றுள்ளார். நள்ளிரவு, 2:00 மணியளவில், பெங்களூரு சாலையில் சென்றபோது அங்கு நின்றிருந்த, 3 சிறுவர்கள், அவரிடம், 'டாஸ்மாக் கடை அருகில் எங்குள்ளது' என கேட்டுள்ளனர். தெரியாது என கூறிவிட்டு நகர்ந்த அவரை, சிறுவர்கள் கல்லால் முகத்தில் கொடூரமாக தாக்கினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரிடமிருந்து, மொபைல்போன், பணத்தை எடுத்துக் கொண்டு, 3 சிறுவர்களும் தப்பினர்.

அவ்வழியே ரோந்து சென்ற போலீசார் டேவிட்ராஜனை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகார்படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, டேவிட்ராஜனை கல்லால் தாக்கி, மொபைல் பறிப்பில் ஈடுபட்ட, 13, 15 மற்றும், 16 வயதுடைய, 3 சிறுவர்களை கைது செய்து, சேலம் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us