/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; 3 சிறுவர்கள் போக்சோவில் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; 3 சிறுவர்கள் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; 3 சிறுவர்கள் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; 3 சிறுவர்கள் போக்சோவில் கைது
ADDED : ஜன 28, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர், 11 வயது சிறுமி. நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த, 9, 10 மற்றும் பிளஸ் 1 படிக்கும், 14, 15, 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் சேர்ந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இது குறித்து சிறுமி, தன் பெற்றோரிடம் அழுதவாறே கூறியுள்ளார். புகார் படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, 3 சிறுவர்களை நேற்று கைது செய்து, இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், சேலம் கூறாய்வு மையத்திற்கு அனுப்பினர்.