/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2.5 பவுன் திருட்டு 3 சிறுவர்கள் சிக்கினர்
/
2.5 பவுன் திருட்டு 3 சிறுவர்கள் சிக்கினர்
ADDED : ஆக 21, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, ஆகிருஷ்ணகிரி அடுத்த குப்பச்சிபாறையை சேர்ந்தவர் பெருமா, 60, கூலித்தொழிலாளி. இவர், கடந்த, 18ல், குடும்பத்துடன் வெளியில் சென்றார்.
அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், வீட்டிலிருந்த இரண்டரை பவுன் நகைகளை திருடி சென்றனர். இது குறித்து பெருமா புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த, 16, 17, மற்றும் 18 வயதுள்ள, 3 சிறுவர்கள் சேர்ந்து, நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்து கைது செய்தனர்.