மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி
ADDED : ஜூன் 19, 2026 04:54 AM
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல-கத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு- பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கும் களப்பயிற்சியாளர்களுக்கு, 3 நாள் பயிற்சி வகுப்-புகளை டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் துவக்கி வைத்து பேசியதாவது: மாவட்டத்தில் மக்கள்-தொகை கணக்கெடுப்பு பணியில், 4,000 பேர் ஈடு-பட உள்ளனர். இவர்களுக்கு பயிற்சிகள் அளிக்க, ஆசிரியர்கள் மற்றும் புள்ளியில் துறையை சேர்ந்த, 72 அலுவலர்கள் களப்பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு, 3 நாட்கள் பயிற்சி நடக்கிறது. மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, முதல் பணியான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு வரும், ஆக., 1 முதல் 30 -வரையும், மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு வரும் ஜூலை, 17 முதல், 31 வரையும் மேற்கொள்-ளப்பட உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுயகணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறை கணக்-கெடுப்பு, முதல்முறை அறிமுகப் படுத்தப்படுகி-றது. பொதுமக்கள் தாங்களாகவே, https://se.census.gov.in இணையதளம் வாயிலாக தங்கள் விபரங்களை தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர்கள் சஜிலால், சஜிதா அஸீஸ், மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் குப்புசாமி, ஆட்சி-யரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன், உதவி இயக்குநர் (புள்ளியியல்) மாளவிகா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
