/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தாவரக்கரை வனத்தில் 3 யானைகள் முகாம்
/
தாவரக்கரை வனத்தில் 3 யானைகள் முகாம்
ADDED : மே 29, 2024 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம், தாவரக்கரை வனப்பகுதியில், 3 யானைகள் முகாமிட்டுள்ளன.
இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த இரு நாட்களாக இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். அதேபோல் ஜார்கலட்டி வனப்பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. எனவே, வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், வனத்திற்குள் ஆடு, மாடு மேய்க்கவோ, விறகு சேகரிக்கவோ செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.