தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய 3 லாரி பறிமுதல்

மண் கடத்திய 3 லாரி பறிமுதல்

மண் கடத்திய 3 லாரி பறிமுதல்


ADDED : ஜூன் 04, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2025 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, தேவசமுத்திரம் வி.ஏ.ஓ., ரிஷிவந்தியன் மற்றும் அலுவலர்கள், கிருஷ்ணகிரியில், சேலம் - பெங்களூரு சாலை தனியார் பள்ளி அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. ரிஷிவந்தியன் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

* ஓசூர் தாசில்தார் குணசிவா, பழைய ஆனைக்கல் சாலையிலும், மத்திகிரி ஆர்.ஐ., தர்மன், அந்திவாடி சோதனைச்சாவடி அருகே நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஒரு லாரியில், 4 யூனிட் மண் மற்றும் மற்றொரு லாரியில், 20 யூனிட் கல் ஆகியவற்றை, உரிய அனுமதி சீட்டு இல்லாமல் கொண்டு செல்வது தெரிந்தது. 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us