/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2 இளம்பெண்கள் உட்பட 3 பேர் மாயம்
/
2 இளம்பெண்கள் உட்பட 3 பேர் மாயம்
ADDED : நவ 01, 2024 01:13 AM
2 இளம்பெண்கள்
உட்பட 3 பேர் மாயம்
ஓசூர், நவ. 1-
சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் ராம்குமார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது, 19 வயது மகள் பி.காம்., முதலாமாண்டு படிக்கிறார். இவர் கடந்த மாதம், 30 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. ராம்குமார் குருபரப்பள்ளி போலீசில் அளித்த புகாரில், ராயக்கோட்டை மிட்டப்பள்ளியை சேர்ந்த புவனேஷ்குமார், 19, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
உத்தனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ், 45. இவரது, 20 வயது மகள் கடந்த, 29ல் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. வெங்கட்ராஜ் உத்தனப்பள்ளி போலீசில் அளித்த புகாரில், சூளகிரி தாலுகா குடிசாதனப்பள்ளியை சேர்ந்த சச்சின்குமார், 21, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓசூர், கீழ் கொல்லர் தெருவை சேர்ந்தவர் மம்தா, 35. இவரது கணவர் வெங்கடேஷ், 45. மனநிலை பாதித்தவர். கடந்த, 27 காலை, 7:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.