/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது
/
திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூலை 03, 2025 01:08 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ், 52. பில்டிங் காண்டிராக்டரான இவர், கடந்த, 28 மாலை, தேன்கனிக்கோட்டை - கெலமங்கலம் சாலையில், முருகன் கோவில் அருகே நடத்தி வரும் செங்கல்சூளையில் இருந்த இரு அறைகளை மூடி விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார். 30ம் தேதி மாலை சென்று பார்த்த போது, அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, 'டிவி' 5 லிட்டர் காஸ் சிலிண்டர், இன்வெட்டர், பேட்டரி என மொத்தம், 28,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயிருந்தது.
தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்தனர். இதில், கெலமங்கலம் அடுத்த பச்சப்பனட்டி அருகே பிதிரெட்டியை சேர்ந்த சிவகாசி, 20, ராமமூர்த்தி, 20, மற்றும் 18 வயது சிறுவன் என, 3 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, திருட்டு போன பொருட்களை பறிமுதல் செய்தனர்.