ADDED : நவ 25, 2025 01:27 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி., ரோடு திருப்பள்ளி ராஜி தெருவை சேர்ந்தவர் யோகேஷ்குமார், 52. இவரது மனைவி கீதா, 38. கடந்த, 19ம் தேதி மதியம், 2:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. கணவர் புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கலுகொண்டப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; கடந்த, 11ம் தேதி காலை, 8:30 மணிக்கு, வீட்டிலிருந்து சென்ற சிறுமி மாயமானார். அவரது தாய் புகார் படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கெலமங்கலம் அருகே சின்னட்டியை சேர்ந்த வெங்கடேஷ் மகள் இந்திரா, 22. கடந்த, 22ம் தேதி மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை கெலமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், ஒன்னுகுறிக்கி வசந்த நகரை சேர்ந்த மூர்த்தி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

