ADDED : ஏப் 22, 2025 01:35 AM
ஓசூர்:ஓசூர், ராஜகணபதி நகரை சேர்ந்தவர் பழனிவேல் மகள் மீனாட்சி, 19. நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் மலர்கொடி, 35, ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், ராஜகணபதி நகரை சேர்ந்த சசிக்குமார், 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கெலமங்கலம் அரகே மஞ்சலகிரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் நித்யஸ்ரீ, 20. கடந்த, 18 காலை, 9:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது அண்ணன் சைலேஷ், 25, கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளியை சேர்ந்த சுதீப் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். நித்யஸ்ரீயை போலீசார் தேடி வருகின்றனர். ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் மணி, 25. பெயின்டர். கடந்த, 18 மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது பெற்றோர் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.