/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உட்பட 3 பேர் பலி
/
வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உட்பட 3 பேர் பலி
ADDED : ஜன 28, 2025 06:41 AM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த பட்டகாப்பட்டியை சேர்ந்தவர் மாசிலாமணி, 55, கட்டட தொழிலாளி. போச்சம்பள்ளியில் கடந்த, 17 மதியம், கட்டட பணியின் போது, முதல்தளத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல்சிகிச்சைக்கு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இறந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
போச்சம்பள்ளி அருகே மூக்கம்பட்டியை சேர்ந்தவர் முனிராஜ், 45, கட்டட தொழிலாளி. இவர் கடந்த, 20ல், குருகப்பட்டி பகுதியில் கட்டட வேலை செய்தபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஓசூர், பேடரப்பள்ளி அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 65. இவர் நேற்று முன்தினம், பல்லுார் ஜங்ஷன் அருகில், ஓசூர் - பெங்களூரு சாலையில் நடந்து சென்றார். அந்த வழியாக சென்ற லாரி மோதியதில் பலியானார். ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.