/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம்
/
சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம்
ADDED : டிச 03, 2024 07:09 AM
ஓசூர்: கர்நாடகா மாநில எல்லையான ஆனைக்கல் அருகே கச்சநாயக்கன-ஹள்ளியை
சேர்ந்த ரமேஷ் என்பவரது வீட்டில், அசாம் மாநி-லத்தை சேர்ந்த பதன்தாஸ், தயாள்,
குலாப் ஆகிய மூன்று பேர் வாடகைக்கு தங்கியிருந்தனர். நேற்று காலை வழக்கம்
போல் எழுந்து, சமையலறையில் சமையல் பணியை மேற்கொள்ள மின்-விளக்கை ஆன்
செய்தனர். அப்போது காஸ் சிலிண்டரில் கசிவு இருந்ததால், திடீரென சிலிண்டர்
பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், வீட்டில் இருந்த பதன்தாஸ், தயாள்,
குலாப் ஆகிய, 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்ட அக்கம்
பக்கத்தினர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவம-னையில் அனுமதித்தனர்.
50 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவர்களுக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. வீட்டில் இருந்த ஜன்னல், கதவுகள், பொருட்கள் கடுமையாக
சேதமடைந்-துள்ளன. ஆனைக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.