/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கனிமங்கள் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
/
கனிமங்கள் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
ADDED : அக் 11, 2025 12:32 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாசில்தார் குணசிவா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், மத்திகிரி பஸ் ஸ்டாண்ட் மற்றும் நாகொண்டப்பள்ளி பஸ் ஸ்டாப் ஆகிய, இரு இடங்களில் வாகன சோதனை செய்தனர். அப்போது, தேன்கனிக்கோட்டையிலிருந்து, பெங்களூருக்கு உரிய அனுமதி சீட்டு இல்லாமல் தலா, 8 யூனிட் எம்.சாண்ட், ஜல்லி ஆகியவற்றை கொண்டு சென்ற இரு லாரிகளை பறிமுதல் செய்து, மத்தகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை - ஒசூர் சாலையில் உள்ள அடவிசாமிபுரம் சந்திப்பு சாலையில், மல்லசந்திரம் வி.ஏ.ஓ., ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 4 யூனிட் கற்களை கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து, தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.