/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குப்பை வரி தள்ளுபடி கோரிக்கை ஓசூரில் 32 சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
/
குப்பை வரி தள்ளுபடி கோரிக்கை ஓசூரில் 32 சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
குப்பை வரி தள்ளுபடி கோரிக்கை ஓசூரில் 32 சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
குப்பை வரி தள்ளுபடி கோரிக்கை ஓசூரில் 32 சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 20, 2025 01:59 AM
ஓசூர்,:குப்பை வரியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, ஓசூரில், 32 சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், 'துாய்மை இந்தியா' திட்டத்தில் கடந்த, 2017ல், அ.தி.மு.க., ஆட்சியில் வீடுகளுக்கு மாதம், 30 ரூபாயும், மற்ற கட்டங்களுக்கு, 300 ரூபாயும் குப்பை வரி விதிக்கப்பட்டு, 7 ஆண்டுக்கும் மேலாக வரி வசூல் செய்யாததால், 118 கோடி ரூபாய் வரை பாக்கி உள்ளது.
இதனால், மாநகராட்சி நிர்வாகம் குப்பை வரியை நிலுவையுடன் வசூல் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, 'சீல்' வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
சொத்து வரி பாக்கியை செலுத்தினால்கூட, குப்பை வரி பாக்கிக்கு தான், முதலில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு டிச.,ல் பாதாள சாக்கடை திட்டத்தை துவக்கி வைத்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, 2017 முதல், 2022 மார்ச் வரை, 5 ஆண்டு காலத்திற்கு குப்பை வரியை தள்ளுபடி செய்ய, முதல்வரிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, 2022 ஏப்., 1 முதல் கணக்கிட்டு குப்பை வரி வசூல் செய்யப்படும் என்றார்.
அமைச்சர் கூறியது போல், 5 ஆண்டுகளுக்கு குப்பை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓசூர் ராயக்கோட்டை சாலையிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், இந்திய மருத்துவ சங்கம், ஓசூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன், துணிக்கடை வியாபாரிகள் சங்கம், ஜூவல்லரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட 32 சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

