/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ராசிபுரம் உழவர் சந்தையில்32,850 கி., காய்கறி விற்பனை
/
ராசிபுரம் உழவர் சந்தையில்32,850 கி., காய்கறி விற்பனை
ராசிபுரம் உழவர் சந்தையில்32,850 கி., காய்கறி விற்பனை
ராசிபுரம் உழவர் சந்தையில்32,850 கி., காய்கறி விற்பனை
ADDED : ஏப் 20, 2025 01:26 AM
ராசிபுரம்:ராசிபுரம் உழவர் சந்தையில் நேற்று, தக்காளி கிலோ, 15, கத்தரி, 34, வெண்டை, 30, புடலை, 35, பீர்க்கன், 45, பாகல், 40, சுரைக்காய், 14, பச்சை மிளகாய், 30, முருங்கை, 30, சின்ன வெங்காயம், 44, பெரிய வெங்காயம், 35, முட்டைகோஸ், 16, கேரட், 52, பீன்ஸ், 80, பீட்ரூட், 35 ரூபாய், வாழைப்பழம், 40, கொய்யா, 50, பப்பாளி, 30, தர்பூசணி, 20, எலுமிச்சை, 60, விலாம்பழம், 48, ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று ஒரே நாளில், 219 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 24,475 கிலோ காய்கறி, 7,960 கிலோ பழங்கள், 415 கிலோ பூக்கள் என மொத்தம், 32,850 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 11.60 லட்சம் ரூபாயாகும். 6,535 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
நிழல் இல்லாத நாள்
ராசிபுரம்:சூரியனுக்கு குறிப்பிட்ட துாரத்தில் பூமி வரும்போது, பொருட்கள் மீது செங்குத்தாக நிழல் விழுகிறது. அந்த சமயத்தில் பொருளின் நிழல் கீழே தெரியாது. இதை நிழல் இல்லாத நாளாக அறிவியல் குறிப்பிடுகிறது. தமிழகத்தில், தற்போது சில நாட்களாக ஒவ்வொரு பகுதியாக நிழல் இல்லாத நாளாக உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பொதுமக்களிடம் விளக்கி வருகிறது. நேற்று ராசிபுரம், ஊட்டி, துறையூர், சங்ககிரி, அன்னுார், அவிநாசி, குன்னுார், நாமக்கல், குமாரபாளையம், பரமத்தி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், குறிப்பிட்ட நேரத்தில் நிழல் இல்லாமல் இருந்தது. ராசிபுரத்தில், மதியம், 12:16 மணிக்கு நிழல் விழாமல் இருந்தது. நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி மற்றும் அறிவியல் கழக நிர்வாகிகள் இதுகுறித்து செய்முறை மூலம் பொதுமக்களுக்கு விளக்கினர்.