ADDED : அக் 21, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கடந்த ஜன., முதல், அக்., 12ம் தேதி வரை நடந்த விபத்துகளில் சம்பவ இடத்திலும், மருத்துவமனை செல்லும் வழியிலும் மொத்தம், 330 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர சிகிச்சையில் இருந்த பலர் உயிரிழந்துள்ளனர். அதையும் சேர்த்து பார்த்தால் இதுவரை, 400 பேருக்கு வரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த, 2023 ல், சாலை விபத்தில், 753 பேர் உயிரிழந்தனர். அது கடந்தாண்டு, 683 ஆக குறைந்த நிலையில், நடப்பாண்டு அதை விட குறைவாக இறப்பு பதிவாகும் என, போலீசார் கருதுகின்றனர்.