தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 35 ஆண்டுகளாக ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கம்கூடுதலாக இயக்க வள்ளுவர்புரம் கிராம மக்கள் கோரிக்கை

35 ஆண்டுகளாக ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கம்கூடுதலாக இயக்க வள்ளுவர்புரம் கிராம மக்கள் கோரிக்கை

35 ஆண்டுகளாக ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கம்கூடுதலாக இயக்க வள்ளுவர்புரம் கிராம மக்கள் கோரிக்கை


ADDED : மார் 27, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

35 ஆண்டுகளாக ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கம்கூடுதலாக இயக்க வள்ளுவர்புரம் கிராம மக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே, வள்ளுவர் புரம் கிராமத்திற்கு அரசு பஸ் சேவை கேட்டு, 35 ஆண்டுகளாக பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றவில்லை. அரசு இதுகுறித்து பரிசீலித்து, அருகிலுள்ள பகுதிகளுக்கு வரும், 8 பஸ்களில், மூன்றையாவது தங்கள் பகுதிக்கு நீட்டிக்க கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பெலவர்த்தி பஞ்., வள்ளுவர் புரம் கிராமத்தில், 350 குடும்பங்களை சேர்ந்த, 1,500 பேர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள்.

இங்கு, 250க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ, மாணவியர் எம்.சி.,பள்ளி, வரட்டனப்பள்ளி, கிருஷ்ணகிரிக்கு சென்று வருகின்றனர். கல்லுாரிக்கு செல்வோர், கிருஷ்ணகிரிக்கு மட்டுமே வந்து செல்லும் சூழல் உள்ளது. ஆனால், இவர்கள் சென்று வர, முறையான பஸ் வசதி இல்லை.

கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன், 45 நெம்பர் பஸ் கிருஷ்ணகிரி பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து எலத்தகிரி, வரட்டனப்பள்ளி, பெலவர்த்தி, வள்ளுவர்புரம் வழியாக எம்.சி.,பள்ளிக்கு இயக்கப்பட்டது.

அது நாளொன்றுக்கு, 3 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. பஸ் சேவை துவங்கியபோது, 500 பேர் மட்டும் வசித்து வந்த நிலையில் தற்போது, 1,500 பேர் வசித்து வரும் நிலையிலும், அந்த ஒரு பஸ்சை மட்டுமே நம்பி இருக்கும் சூழல் உள்ளது.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் சரியான நேரத்திற்கு பஸ் சேவை இல்லாமல், அருகிலுள்ள பகுதிகளுக்கு, 3 கி.மீ., துாரம் நடந்து செல்லும் அவலம் உள்ளது. அரசு மருத்துவமனைக்கு செல்ல கூட, பஸ்சுக்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. வள்ளுவர்புரத்திற்கு தனியார் பஸ் ஒன்று இயக்கப்பட்டாலும், அது சரிவர வருவதில்லை.

கிருஷ்ணகிரியிலிருந்து, 29, 32, 24, 56, 51, 64. 66ஏ ஆகிய டவுன் பஸ்கள் அருகிலுள்ள எம்.சி., பள்ளிக்கு இயக்கப்பட்ட போதும், வள்ளுவர்புரத்திற்கு ஒரு கூடுதல் பஸ் சேவை கூட வழங்கப்

படவில்லை. மேற்குறிப்பிட்ட பஸ்கள், நாளொன்றுக்கு கிருஷ்ணகிரியிலிருந்து, 25 முறை வந்து செல்கின்றன. ஆனால், வள்ளுவர்புரத்திற்கு, நாளொன்றுக்கு மூன்று முறை மட்டும் ஒரே பஸ் மட்டும் வந்து செல்லும் அவலம் உள்ளது.

குறிப்பாக, 29 வழித்தட எண் கொண்ட பஸ் காலையில், 7:00 மணி, 8:45 மணி மற்றும் மாலை, 4:00 மணி, 5:45 மணிக்கு எம்.சி.பள்ளியில் இருபது நிமிடம் நிறுத்தப்படுகிறது. இந்த பஸ் சேவையை வள்ளுவர் புரம் வரை நீட்டித்தால், மாணவர்கள், தொழிலாளர்கள் பயன்பெறுவர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us