தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 4 வயது குழந்தை சாவுஉறவினர்கள் சாலை மறியல்

4 வயது குழந்தை சாவுஉறவினர்கள் சாலை மறியல்

4 வயது குழந்தை சாவுஉறவினர்கள் சாலை மறியல்


ADDED : ஏப் 11, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

4 வயது குழந்தை சாவுஉறவினர்கள் சாலை மறியல்

அஞ்செட்டி:அஞ்செட்டி அருகே சிகிச்சையிலிருந்த, 4 வயது குழந்தை இறப்புக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை கோரி, குழந்தையின் உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த கடுகுநத்தத்தை சேர்ந்த சின்னதுரை - பிரீத்தா தம்பதியின் மகன் பிரசாந்த், 4. கடந்த, 30ல், வீட்டு மாடி படிக்கட்டில் விளையாடிய போது தவறி விழுந்தார். குழந்தையின் வலது தொடையில் அடிபட்ட நிலையில், அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று குழந்தை ஜன்னி வந்து இறந்ததாக கூறியுள்ளனர். மேலும், குழந்தையை பிளாஸ்டிக் கவரில் கட்டி, பிரேத பரிசோதனை கூட செய்யாமல் அடக்கம் செய்ய கூறியுள்ளனர். இந்நிலையில் முறையாக சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க‍ வலியுறுத்தி, அஞ்செட்டி வன அலுவலகம் முன், குழந்தையின் உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்த்ராஜ் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, இது குறித்து புகார் மனு அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us