ADDED : நவ 19, 2025 02:16 AM
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சென்னப்பள்ளி அருகே ஒண்டியூரை சேர்ந்த அபிமன்னன், 60, விவசாயி; இவரது மனைவி ஜெயம்மா, 54. அபிமன்னனுக்கும், அவரது தம்பி அர்ஜூனன், 55, என்பவருக்கும் சொத்து தகராறு உள்ளது. அபிமன்னன் தனது நிலத்தில் கால்நடைகளுக்கு கொட்டகை கட்டியிருந்தார். அதை, அர்ஜூனன் மற்றும் அவரது தரப்பினர் சேதப்படுத்தினர். மேலும், கொட்டகை தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாக கூறினர். இதனால் அவர்களுக்குள் வார்த்தை தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அர்ஜூனன் தரப்பினர், இரும்பு கம்பி மற்றும் மரக்கட்டையால், அபிமன்னன் மற்றும் அவரது மனைவி ஜெயம்மா ஆகியோரை தாக்கினர். காயமடைந்த இருவரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அபிமன்னன் புகார்படி, அர்ஜூனன், அவரது மனைவி எல்லம்மாள், 35, மகன் அழகரசன், 19 மற்றும் 17 வயது மகன் ஆகிய, 4 பேரை, சூளகிரி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

