/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளியில் குடிபோதையில் தகராறு செய்த 4 பேர் கைது
/
பள்ளியில் குடிபோதையில் தகராறு செய்த 4 பேர் கைது
ADDED : ஆக 15, 2025 02:29 AM
ஓசூர், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளிக்கு கடந்த, 1ல், தேன்கனிக்கோட்டை, அண்ணா நகரை சேர்ந்த மலர் சின்னப்பன் என்பவர் பள்ளியில் படிக்கும் தன் பேரன்களை பார்க்க சென்றுள்ளார். அவருடன் செந்தில், 41, என்பவரும் சென்றுள்ளார்.
செந்தில் குடிபோதையில் இருந்ததால் பள்ளிக்குள் வர வேண்டாம் என, அங்குள்ளோர் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது பள்ளி ஊழியர்களை குடிபோதையில் வந்தவர்கள் தாக்கினர். இது குறித்து பள்ளி தாளாளர் சூர்யா அளித்த புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார், குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நவ்ராஜ், 48, சரத், 33, விஜய், 28, செந்தில், 49, ஆகிய நால்வரை கைது செய்தனர்.