/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மளிகைக்கடை உரிமையாளர் கொலையில் பெண் உட்பட 4 பேர் கைது; 3 பேர் சரண்
/
மளிகைக்கடை உரிமையாளர் கொலையில் பெண் உட்பட 4 பேர் கைது; 3 பேர் சரண்
மளிகைக்கடை உரிமையாளர் கொலையில் பெண் உட்பட 4 பேர் கைது; 3 பேர் சரண்
மளிகைக்கடை உரிமையாளர் கொலையில் பெண் உட்பட 4 பேர் கைது; 3 பேர் சரண்
ADDED : ஜன 09, 2024 11:41 AM
ஓசூர்: ஓசூரில் நடந்த மளிகைக்கடை உரிமையாளர் கொலையில், பெண் உட்பட, 4 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் நீதிமன்றத்தில், 3 பேர் சரணடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்த மளிகை கடைக்காரர் திம்மராஜ், 40; கடந்த, 5ம் தேதி மாலை அவரை மர்ம கும்பல் ஒன்று, இரும்பு ராடால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது.
ஆதரவாக சொல்லவில்லை
ஓசூர், சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடந்த இரு ஆண்டுக்கு முன் நடந்த ஒரு அடிதடி வழக்கில், பேகேப்பள்ளியை சேர்ந்த, அ.தி.மு.க., பெண் உறுப்பினரான ஒருவர் வெட்டப்பட்டார். இச்சம்பவத்தில், அப்பெண்ணிற்கு ஆதரவாக கொலையான திம்மராஜ் சாட்சி சொல்லவில்லை என்பதும், அவரது மளிகை கடையில் பாக்கி நிறைய வைத்திருந்த அப்பெண்ணிடம், பணம் தருமாறு, பலர் மத்தியில் திம்மராஜ் கேட்டுள்ளார். இது அப்பெண்ணிற்கு அவமானத்தை ஏற்படுத்தியது.
நீதிமன்ற காவல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் மகன் தன் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து, திம்மராஜை கொலை செய்தது தெரிந்தது.
இக்கொலையில் முக்கிய குற்றவாளியான அப்பெண்ணின் மகனான ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்த கிரண், 22, மற்றும் ராஜ்குமார், 22, தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மூர்த்தி, 21, ஆகிய, 3 பேர், ராமநாதபுரம் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி உத்தர
விட்டார்.
ஆயுதங்கள் சப்ளை
இக்கொலை தொடர்பாக, ஓசூர் அருகே நல்லுாரை சேர்ந்த ராகேஷ், 19, பேகேப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீதர், 27, அவருக்கு உதவிய அவரது மனைவி ஸ்வேதா, 25, ஆயுதங்கள் சப்ளை செய்த பேரிகையை சேர்ந்த முரளி, 24, ஆகிய, 4 பேரை, சிப்காட் போலீசார் நேற்று கைது
செய்தனர்.