sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டிரைவர் கொலையில் மேலும் 4 பேர் கைது கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்

/

டிரைவர் கொலையில் மேலும் 4 பேர் கைது கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்

டிரைவர் கொலையில் மேலும் 4 பேர் கைது கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்

டிரைவர் கொலையில் மேலும் 4 பேர் கைது கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்


ADDED : ஜன 26, 2025 04:01 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில், டிரைவரை கொலை செய்த வழக்கில் மேலும், 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார், 32; டிரைவர். இவரை கடந்த, 21 இரவு பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஓட, ஓட விரட்டி வெட்டி கொன்றனர். இச்-சம்பவத்தில் சிவக்குமார் மனைவியின் அண்ணனான,

ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த நவீன், 33, மற்றும் வினோத்-குமார், 26, ஆகியோரை கடந்த, 23 ல், ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், கூலிப்படையினரான திருநெல்வேலி மாவட்டம், மேலபாளையத்தை சேர்ந்த சுடலை கிருஷ்ணன், 38, கிருஷ்ணாபு-ரத்தை சேர்ந்த இசக்கிமுத்து, 20, ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், 30, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தை சேர்ந்த இம்ரான்ஷா, 20, ஆகிய, 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களை, ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்-தனர்.கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் கூறியதாவது: கொலையான சிவக்குமாருக்கு, அவரது மச்சான் நவீனின் மனைவி, சகோதரி உறவுமுறை என்ற போதும், கடந்த, 3 ஆண்டு-களாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இது நவீனுக்கு ஆத்தி-ரத்தை ஏற்படுத்தியது. மேலும், தேர்ப்பேட்டையை சேர்ந்த மணி-கண்டனின் மனைவி திருமணமாகி, 7 ஆண்டுக்கு பின் கர்ப்ப-மாகி உள்ளார்.ஆனால், கொலையான சிவக்குமார், மணிகண்-டனை பொது இடத்தில் வைத்து, ஆண் பிள்ளை இல்லாத அவ-னுக்கு எப்படி குழந்தை பிறக்கும் என, மனது புண்படும் படி, தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இது மணிகண்டனுக்கு ஆத்-திரத்தை ஏற்படுத்தியது. அதனால் நவீன், மணிகண்டன் இரு-வரும் கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய, 2 பட்டா கத்தி, டூவீலர் பறிமுதல் செய்யப்பட்-டுள்ளன. இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us