/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காப்பர் கேபிள் திருடிய 4 பேர் கைது
/
காப்பர் கேபிள் திருடிய 4 பேர் கைது
ADDED : மே 29, 2024 07:42 AM
ஓசூர்: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அடுத்த பொ.மல்லாபுரத்தை சேர்ந்தவர் சரவணன், 30; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த ஜெக்கேரியில் தங்கி, தனியார் ரோடு கான்டிராக்ட் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார்; ராயக்கோட்டை ரோட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடப்பதால், ஜெக்கேரி தனியார் நர்சரி பண்ணை அருகே தார் பிளாண்ட் அமைத்துள்ளனர்.
இதன் கன்ட்ரோல் கேபிளை நேற்று முன்தினம் இரவு உடைத்து, 50 மீட்டர் நீள காப்பர் மற்றும் 100 மீட்டர் காப்பர் கேபிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.சரவணன் புகார்படி, கெலமங்கலம் போலீசார் விசாரித்தனர். இதில், உத்தனப்பள்ளி அடுத்த தேவசானப்பள்ளியை சேர்ந்த ஆஞ்சி, 25, ஒன்னுகுறுக்கியை சேர்ந்த ஆனந்த், 20, முதுகானப்பள்ளி அருகே பெலகேரியை சேர்ந்த முருகேசன், 40, கெலமங்கலம் நேதாஜி நகர் தபரேஷ், 30, ஆகிய, 4 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், பதிவு எண் இல்லாத ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.