/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலை விபத்தில் 4 பேர் பலி சம்பவம் மேலும் 4 டிரைவர்கள் மீது வழக்கு
/
சாலை விபத்தில் 4 பேர் பலி சம்பவம் மேலும் 4 டிரைவர்கள் மீது வழக்கு
சாலை விபத்தில் 4 பேர் பலி சம்பவம் மேலும் 4 டிரைவர்கள் மீது வழக்கு
சாலை விபத்தில் 4 பேர் பலி சம்பவம் மேலும் 4 டிரைவர்கள் மீது வழக்கு
ADDED : அக் 14, 2025 07:27 AM
ஓசூர்: ஓசூர் அருகே, 3 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உட்பட, 4 பேர் பலியான வழக்கில், மேலும், 4 வாகன டிரைவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில், பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சா-லையில், நேற்று முன்தினம் அதிகாலை அடுத்தடுத்து வாக-னங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. கடைசியாக, பிக்கப் மீது மோதி நின்ற ஹீண்டாய் கிரெட்டா கார் மீது, பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் கார், அப்பளம் போல் நொறுங்கி, அதில் பயணித்த கனடாவில் சாப்ட்வேர் இன்ஜினிய-ராக பணியாற்றிய ஈரோட்டை சேர்ந்த மதன்குமார், 28 மற்றும் பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றும் அவரது நண்பர்களான, சேலம் மாவட்டத்தை சேர்ந்த மணிவண்ணன், 27, கோகுல், 28, மற்றும் யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதியுள்ள முகிலன், 30, ஆகிய, 4 பேர் பலியாகினர்.
இந்த விபத்து தொடர்பாக, முகிலனின் உறவினரான சேலம் சொர்ணபுரியை சேர்ந்த சதீஷ்குமார், 40, புகார் படி, விபத்திற்கு காரணமான, கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கிரிஷா, 33, என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும் விபத்துக்கு காரணமான, கிருஷ்ணகிரி அருகே சின்னபனமுட்லுவை சேர்ந்த டாரஸ் லாரி டிரைவர் லட்-சுமணன், 26, பெங்களூரு அடுத்த ஆனைக்கல் அருகே, நெல்-லுாரை சேர்ந்த லாரி டிரைவர் அக்பர் அலி லஸ்கர், 33, மேற்கு வங்கத்தை சேர்ந்த டாடா ஹாரியார் கார் டிரைவர் அப்ஜத் தெப்ராய், 35, ஆந்திராவை சேர்ந்த பிக்கப் வாகன டிரைவர் பிர-வீன்குமார், 25, ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிந்து, ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.