/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மணல், கற்கள் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
/
மணல், கற்கள் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
ADDED : மே 27, 2025 01:56 AM
பாகலுார் ஓசூர், தாசில்தார் குணசிவா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஈச்சங்கூர் பகுதியில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, ஒரு லாரியில், 4 யூனிட் மற்றும் மற்றொரு லாரியில், 3 யூனிட் எம்.சாண்ட் மண்ணை, உரிய அனுமதி சீட்டு இல்லாமல் கொண்டு செல்வது தெரிந்தது. லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாகலுார் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரிக்கின்றனர்.* சிவம்பட்டி வி.ஏ.ஓ., அர்ச்சனா மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் அப்பகுதியிலுள்ள குவாரிகள் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனையிட்டதில், கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. புகார் படி, மத்தூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் கனகராஜ், 33 என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
அதேபோல் காட்டேரி வி.ஏ.ஓ., பழனிசாமி மற்றும் அலுவலர்கள் மெய்யாண்டப்பட்டி அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. புகார் படி, லாரியை பறிமுதல் செய்த ஊத்தங்கரை போலீசார், தப்பிய டிரைவர், இம்ரானை தேடி வருகின்றனர்.