ADDED : செப் 04, 2026 05:16 AM
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிம வள கடத்-தலை தடுக்க அதிகாரிகள் குழுவினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்-ணகிரி கனிமவள பிரிவு உதவி இயக்குனர் சர-வணன் மற்றும் வருவாய் துறையினர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் ரோந்து சென்றனர். பாஞ்சாலியூர் அருகே நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. அதிகாரிகள் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
பாகலுார் அருகே வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். தேவீரப்-பள்ளி அருகே நின்ற ஒரு டிப்பர் லாரியை சோத-னையிட்டதில், 4 யூனிட் எம்.சாண்ட் கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரிந்தது. பாலிக்கானப்பள்ளி வி.ஏ.ஓ., பிரபாகரன் புகார் படி, பாகலுார் போலீசார், லாரியை பறிமுதல் செய்-தனர்பாகலுார் அடுத்த ஜி.மங்கலம் அருகே நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. பாகலுார் வி.ஏ.ஓ., நேத்ரா புகார் படி பாகலுார் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். அதேபோல, பெலத்துார் அருகே நின்ற ஒரு லாரியில், 4 யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. பெலத்துார் வி.ஏ.ஓ., மூர்த்தி புகார் படி லாரியை, பாகலுார் போலீசார்
பறிமுதல் செய்தனர்.
