/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியின்றி மண் அள்ளிய 4 வாகனங்கள் பறிமுதல்
/
அனுமதியின்றி மண் அள்ளிய 4 வாகனங்கள் பறிமுதல்
ADDED : நவ 10, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ஓசூர் சாலையில் உள்ள ஏரியில், திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக, நல்லுார் வி.ஏ.ஓ., வெற்றிக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற அவரது தலைமையிலான வருவாய்த்துறையினர், திருட்டுத்தனமாக மண் அள்ளிய, 3 டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

