ADDED : செப் 17, 2026 06:40 AM

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, 449 மி.மீ., மழை பெய்துள்ளது.
க்ஷகிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோடைக்காலத்தை விட கடந்த, 2 மாதங்களாக கடுமையான வெப்பம் வாட்டி வருகிறது. பகலில் மட்டுமின்றி இர-விலும் வெப்பக்காற்று வீசியதால், பொதுமக்கள் பலர் துாக்கமின்றி தவித்து வந்தனர். இந்நி-லையில் கடந்த, 3 நாட்களாக மாவட்டம் முழு-வதும் இரவில், பரவலாக மழை பெய்து வருகி-றது. இதனால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதேபோல், முதல்போக சாகு-படிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருந்த விவசாயிகள், இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால், கிருஷ்ண-கிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து அதி-கரித்தது. நேற்று முன்தினம் அணைக்கு, 158 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 365 கன அடி-யாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து தென்-பெண்ணை ஆற்றில், 203 கன அடி நீர் திறக்கப்பட்-டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 46 அடியாக இருந்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்-டத்தில் அதிபட்சமாக ஓசூரில், 71 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், தேன்கனிக்-கோட்டை - 63, கிருஷ்ணகிரி - 58.30, நெடுங்கல் -51.80, ராயக்கோட்டை - 37, கே.ஆர்.பி., அணை - 31, கெலவரப்பள்ளி - 24, சூளகிரி, தளி, அஞ்செட்டி தலா - 20, பெனுகொண்டாபுரம் - 17.20, சின்னாறு அணை - 15, போச்சம்பள்ளி - 8, பாம்பாறு அணை, ஊத்தங்கரை தலா - 4.60, பாரூர் - 4 மி.மீ., என மொத்தம், 449.50 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
