ADDED : ஜூன் 20, 2026 05:15 AM
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரியில், வீட்டு உபயோக சிலிண்டர்க-ளிலிருந்து, சிறிய சிலிண்டரில் காஸ் மாற்றி விற்பனை செய்த, 5 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியில், வீட்டு உபயோக சிலிண்டரிலி-ருந்து, சிறிய சிலிண்டருக்கு காஸ் மாற்றி விற்-பனை நடப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் பூவிதன் தலைமையில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் சிவனேஸ்வரன், துணை ஆய்வாளர் கதிரவன், சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர், கிருஷ்ணகிரி தனியார் காஸ் அடுப்பு விற்பனை கடைகளில் சோதனையிட்டனர்.
கிருஷ்ணகிரி, சந்தைபேட்டையில் உள்ள இரண்டு தனியார் காஸ் அடுப்பு கடைகளில் சட்ட விரோதமாக, வீட்டு உபயோக சிலிண்டர்களில் இருந்து, இயந்திரம் மூலம், 5 கிலோ அளவில் காஸ் பிடிக்கும் சிறிய சிலிண்டரில் காஸ் மாற்-றியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிட-மிருந்து, 5 காஸ் சிலிண்டர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோத காஸ் விற்பனையில் ஈடுபட்ட, தனியார் காஸ் சிலிண்டர் கடையின் விற்பனையாளர் மீது வழக்-குபதிந்துள்ளனர்.
